தொழில்நுட்பம்

‘பவர்… பன்ச்… பெர்ஃபார்மன்ஸ்’… ஆல்-ரவுண்டர் iQOO Z10 Turbo+ எப்போது வெளியீடு?

Published

on

‘பவர்… பன்ச்… பெர்ஃபார்மன்ஸ்’… ஆல்-ரவுண்டர் iQOO Z10 Turbo+ எப்போது வெளியீடு?

iQOO நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளான iQOO Z10 Turbo+ ஸ்மார்ட்போன், TWS Air 3 Pro இயர்பட்ஸ் மற்றும் பவர் பேங்க் ஆகியவற்றை ஆகஸ்ட் 7-ஆம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சாதனங்கள் இந்தியாவுக்கு வருமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.iQOO Z10 Turbo+  சிறப்பம்சங்கள்:iQOO Z10 Turbo+ ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 7 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Polar Grey, Cloud White, மற்றும் Desert ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கும். MediaTek Dimensity 9400+ சிப்செட், 8,000mAh பேட்டரி, டிஸ்பிளே: 2,000 nits உச்ச பிரகாசம், 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே, 1.5K ரெசல்யூஷன், 144Hz புதுப்பிப்பு வீதம், பின்புறத்தில் டூயல் கேமரா அமைப்பு. 50-மெகாபிக்சல் Sony LYT-600 முதன்மை சென்சார் மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ். சதுர வடிவ கேமரா மாட்யூல் மற்றும் ரிங் LED ஃபிளாஷ் இருக்கும். செல்ஃபி 16-mp, Android 15, 16GB வரை ரேம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.iQOO TWS Air 3 Pro மற்றும் பவர் பேங்க்: ஸ்மார்ட்போனுடன், iQOO TWS Air 3 Pro இயர்பட்ஸ் மற்றும் 10,000mAh பவர் பேங்க் ஆகியவையும் ஆகஸ்ட் 7 அன்று வெளியிடப்படும். iQOO TWS Air 3 Pro இந்த ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன், இலகுரக செமி-இன்-இயர் வடிவமைப்பில் வரும். இது Star Diamond White மற்றும் Star Yellow ஆகிய 2 வண்ணங்களில் கிடைக்கும். 10,000mAh திறன் கொண்ட பவர் பேங்கில் உட்புற கேபிள் இருக்கும். இது 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். இந்த பவர் பேங்க் Extreme Yellow என்ற ஒற்றை வண்ணத்தில் கிடைக்கும். இந்த புதிய iQOO தயாரிப்புகள் இந்தியாவிற்கு எப்போது வரும் என்பது குறித்து நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version