சினிமா

மருமகளின் வருகையுடன் மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட நெப்போலியன்.! வைரலான வீடியோ.!!

Published

on

மருமகளின் வருகையுடன் மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட நெப்போலியன்.! வைரலான வீடியோ.!!

தமிழ் சினிமாவின் விறுவிறுப்பான நடிகர்களில் ஒருவர், நெப்போலியன். தனது திறமையான நடிப்பால் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியுள்ளார். தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிற நெப்போலியன், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து, தனது குடும்ப நிகழ்வுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில், அவரது மகன் தனுஷ் கடந்த ஜூலை 27, 2025 அன்று தனது 27வது பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார். இது “Golden Birthday” என அழைக்கப்படுகிறது, ஏனெனில் பிறந்த தேதி 27, வயதும் 27! இந்த மகிழ்ச்சியான நிகழ்வு அமெரிக்காவில் உள்ள நெப்போலியனின் இல்லத்தில் நடத்தப்பட்டது. அவரின் மனைவி, குடும்ப நண்பர்கள், மற்றும் பாசமிகு மருமகள் அக்‌ஷயா உள்ளிட்டோர் சேர்ந்து தனுஷுன் பிறந்தநாளை அருமையாக கொண்டாடியிருந்தனர். இந்த நிகழ்வில் உள்ள ஒவ்வொரு தருணத்தையும் கேமரா மூலமாக பதிவுசெய்து, ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் நெப்போலியன். அவர் தனது Instagram பக்கத்தில் பதிவிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.வீடியோவுடன் இணைத்து நெப்போலியன், “அன்பு நண்பர்களே, உலகெங்கும் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களே, உங்களது அன்பாலும், ஆசீர்வாதத்தாலும், தனுஷுடைய 27வது பிறந்தநாளை , அதாவது தனுஷுடைய Golden Birthday வை அக்‌ஷயாவுடனும், எங்கள் நேஷ்வில் குடும்ப நண்பர்களுடனும் சேர்ந்து நாங்கள் மகிழ்ச்சியாக July 27ல் எங்கள் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினோம்.” என்ற பதிவையும் வெளியிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version