இலங்கை

வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பயணித்த வாகனம் விபத்து!

Published

on

வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பயணித்த வாகனம் விபத்து!

வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் பயணித்த வாகனம் கிளிநொச்சியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ்ப்பிரிவுக்குட்பட்ட பரந்தன் முல்லை வீதியின் இரண்டாவது மைல்கல் பகுதியில் இன்று (01) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Advertisement

கட்டாக்காலி மாடுகள் திடிரென வீதியை குறுக்கே சென்றமையால் பிரதி பொலிஸ்மா அதிபர் பயணித்த வாகனம் மாட்டுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

குறித்த வாகனத்தில் இரண்டு மாடுகள் மோதுண்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தருமபுரம் காவல் நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுவர் தொடர்பான அலுவலகம் திறந்து வைப்பதற்கு சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version