இலங்கை

வரலாற்றுச் சாதனை – அரச மருத்துவமனையில்யில் பிறந்த முதலாவது ஐ.வி.எவ் குழந்தை!

Published

on

வரலாற்றுச் சாதனை – அரச மருத்துவமனையில்யில் பிறந்த முதலாவது ஐ.வி.எவ் குழந்தை!

இலங்கையின் அரச மருத்துவதுறையில் வெளிச் சோதனை முறை கருத்தரிப்பு முறையில் வெற்றிகரமாக முதலாவது  குழந்தை நேற்றையதினம் (31) பிறந்துள்ளது.

இந்த குழந்தை ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனாமருத்துவமனையில் சிசேரியன் மூலம் பிறந்துள்ளது.

Advertisement

பிரசவத்தின் பின்னர் 31 வயதுடைய தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் IVF நிலையத்தின் ஒரு வருட கால முயற்சியின் விளைவாக இடம்பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இந்த IVF செயற்கை கருத்தரிப்பு முறை முதன் முதலில் பல்கலைக்கழகத்தின் கருத்தரித்தல் மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.  

Advertisement

அரசாங்கம் நடத்தும் IVF திட்டத்திற்குப் பின்னர் அரச மருத்துவமனையில் குழந்தை ஒன்று பிறப்பது இதுவே முதல் முறை ஆகும்.

களனி பல்கலைக்கழகத்தின் ஆலோசகர் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் பேராசிரியர் ரசிக்கா ஹேரத் தலைமையிலான மருத்துவக் குழுவால் சிசேரியன் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாதனை, அதே பீடத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளரும் கருத்தரித்தல் மருத்துவ நிபுணர் சுரங்க ஹெட்டிபத்திரண தலைமையிலான மருத்துவக் குழுவால் நடத்தப்பட்ட அரச கருத்தரித்தல் மையத்தில் நடத்தப்பட்ட முதலாவது வெற்றிகரமான IVF கருத்தரிப்பு என்பதிலும் குறிப்பிடத்தக்கது..

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version