உலகம்

வரிகள் தொடர்பான உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப்!

Published

on

வரிகள் தொடர்பான உத்தரவில் கையெழுத்திட்ட டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீது புதிய வரிகள் தொடர்பான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

பல நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% முதல் 41% வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த உத்தரவின்படி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25%, தைவானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பொருட்களுக்கு 30% ஆகியவை அடங்கும்.

இது தவிர, சிரியா மீது இதுவரை இல்லாத அளவுக்கு 41% வரியை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லாவோஸ் மற்றும் மியான்மார் மீது 40 சதவீதமும், சுவிட்சர்லாந்து மீது 39 சதவீதமும், செர்பியா மற்றும் ஈராக் மீது 35 சதவீதமும், அல்ஜீரியா மற்றும் லிபியா மீது 30 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தவிர, கனடா மீது முன்னர் 25 சதவீதமாக விதிக்கப்பட்ட வரியும் 35 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரிகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version