இலங்கை

வவுனியாவில் சிறைச்சாலை வாகனத்தில் சபை அமர்வுக்கு வந்த உறுப்பினர்

Published

on

வவுனியாவில் சிறைச்சாலை வாகனத்தில் சபை அமர்வுக்கு வந்த உறுப்பினர்

பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் பிரதேச சபை அமர்வுக்கு உறுப்பினர் ஒருவர் அழைத்து செல்லப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் பதிவாகியுள்ளது.

சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு சிறைச்சாலை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

Advertisement

கடந்த 11 ஆம் திகதி வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக ஒருவர் உயிரிழந்ததுடன் 5 பொலிஸார் காயமடைந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில 7 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தின் போது அப் பகுதியில் மக்களுடன் நின்ற தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வாக்கு மூலம் பெறுவற்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்படட நிலையில் கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

Advertisement

அவரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் சபை அமர்வுக்காக நீதிமன்ற அனுமதி பெற்று பொலிசார் மற்றும் சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் அமர்வுக்காக அழைத்து வரப்பட்டு அமர்வில கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

அமர்வு முடிந்ததும் மீண்டும் அதே வாகனத்தல் அழைத்து சென்று சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version