சினிமா
‘வாத்தி’யின் இசைக்கு தேசிய விருதை பெற்ற ஜி.வி.பிரகாஷ்….!மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
‘வாத்தி’யின் இசைக்கு தேசிய விருதை பெற்ற ஜி.வி.பிரகாஷ்….!மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில், இசை ரசிகர்களுக்கு பெருமிதம் தரும் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார், “வாத்தி” திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றுள்ளார். இந்த திரைப்படம் தனுஷ் நடித்துள்ளார் .“வாத்தி” திரைப்படம் 2023 ஆம் ஆண்டில் வெளியாகி உள்ளது. அதில் இடம்பெற்ற பாடல்களும் பின்னணிச் இசையும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. “வா வாத்தி”, “நாடோடி மன்னன்” போன்ற பாடல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, இசை ரசிகர்களின் இதயங்களை தொட்டன. இந்த வெற்றி, ஜி.வி. பிரகாஷின் இசைத்திறனை தேசிய அளவில் அங்கீகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஜி.வி. பிரகாஷ், தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தனது இசையால் தனித்துவம் நிலைநாட்டியவர். இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய திரைப்பட உலகமே பாராட்டும் பெருமை. தேசிய விருதுகளால் அவரது இசை பயணம் மேலும் உயர ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.