சினிமா
35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தேசிய விருது – ‘ஜவான்’ மூலம் வரலாறு படைத்த ஷாருக் கான்!
35 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் தேசிய விருது – ‘ஜவான்’ மூலம் வரலாறு படைத்த ஷாருக் கான்!
பாலிவுட் சினிமாவின் பாதி உலகமே நேசிக்கும் நட்சத்திரம் ஷாருக் கான், தனது 35 வருட திரைப்பயணத்தில் முதல்முறையாக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்.அட்லி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திய ‘ஜவான்’ திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது விமர்சகர்களிடமும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. ‘ஜவான்’ திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்த ஷாருக், தனது அபாரமான நடிப்பின் மூலம் சமூக நீதி, அரசியல் பற்றிய பல்வேறு கேள்விகளை எழுப்பி, இந்தியா முழுவதும் பலமடங்கு ரசிகர்களை கவர்ந்தார்.இந்த சாதனை, அவரின் நீண்ட நாட்களாக வந்த முயற்சி மற்றும் நடிப்பின் மீது வைத்திருந்த அக்கறையின் சான்றாகும். பாலிவுட்டில் ‘கிங் கான்’ என அழைக்கப்படும் ஷாருக் கானுக்கு இது அவரது ரசிகர்கள் மற்றும் இந்திய சினிமாவிற்கே பெரும் பெருமையாகும். ‘ஜவான்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, அரசியல் மற்றும் சமூக நீதிக்கான குரலாகவும் விளங்கியது. அட்லியின் இயக்கத்திலும், அனிருத் இசையிலும், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி நடித்த முக்கிய வேடங்களிலும் இந்த படம் மெகா ஹிட்டானது.