இலங்கை
அதிரடியாக நீதவான் திலின கமகே இடைநிறுத்தம்
அதிரடியாக நீதவான் திலின கமகே இடைநிறுத்தம்
மொரட்டுவை நீதவானாக பணியாற்றிய திலின கமகேவின் பணிகளை இடைநிறுத்த நீதிசேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அவருக்கு எதிரான தவறான நடத்தை குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணையையடுத்து, இந்த இடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு குறித்து 21 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு கோரி ஆணைக்குழு நேற்று (1) எழுத்துப்பூர்வமாக நீதவானுக்கு அறிவித்தது.
முன்னதாக, சட்டவிரோதமான யானை வைத்திருந்தமை தொடர்பில் அவருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த ஜூன் மாதம், நீதிச்சேவை ஆணைக்குழு, திலின கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.