இலங்கை
கல்கிசையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு!
கல்கிசையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பு புறநகர்ப்பகுதி கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றது.
அங்குலான பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் இந்தக் கொலை இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களில் ஒருவர் லுனாவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாகவும்,
மற்றொருவர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையைச் செய்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற அவர்களைக் கைது செய்ய கல்கிசை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.