இலங்கை

குரு நட்சத்திர பெயர்ச்சியால் பொற்காலம் பெறும் ராசிகள்

Published

on

குரு நட்சத்திர பெயர்ச்சியால் பொற்காலம் பெறும் ராசிகள்

செல்வம் மற்றும் அறிவாற்றலை வழங்கும் அதிபதி என்று கருதப்படும் குரு பகவான், வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி, ஆவணி மாத பிறப்புக்கு முன் புனர்வசு நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். 

அந்த வகையில் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என நாம் இங்கு பார்ப்போம். 

Advertisement

மேஷ ராசியினர் குரு பெயர்ச்சியினால் மிகுந்த பலன் அடைவார்கள். மேஷ ராசியினரை ஆளும் கிரகம் செவ்வாய். நெருப்பு அம்சம் கொண்ட இந்த ராசியினர், ஆற்றல் நிறைந்தவர்களாகவும், எதையும் கண்டு அஞ்சாத நெஞ்சம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வேலைகள் அனைத்தும் நிறைவடையும். குருவின் செல்வாக்கால் புதிய சாதனைகள் சாத்தியமாகும். திடீர் பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

கடக ராசியினரை ஆளும் கிரகம் சந்திரன். நீர் அம்சம் கொண்ட இந்த ராசிகள், எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அன்புக்கு கட்டுப்படுபவர்கள். குடும்பத்தை நேசிப்பவர்கள். அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக இருப்பவர்கள்.  பலன்கள் குருவின் அருளால் முயற்சிகள் அனைத்தும் திருவினையாகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வாகனம் வாகனமும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் இதனால் வரை இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி இன்ப வாழ்வு பிறக்கும்.

மீன ராசியினரை ஆளும் கிரகம் குரு. ஆன்மீக சிந்தனை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறர் துன்பத்தைக் கண்டு அனுதாபம் கொண்டு, தன்னால் இயன்ற உதவிகளை செய்வார்கள். உணர்ச்சிபூர்வமானவர்கள். மற்றவர் உணர்ச்சிகளுக்கும் மதிப்பளிப்பார்கள்.  வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையில் தொழிலில் உங்கள் திறமையை நிரூபித்து பாராட்டை பெறுவீர்கள்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version