பொழுதுபோக்கு

சின்ன ஈகோ தான், 25 வருஷம் பேசல; பிரிந்த குடும்பம் சேர்ந்தது இப்படித்தான்; மாமன் சூரி வீட்டு ரியல் சம்பவம்!

Published

on

சின்ன ஈகோ தான், 25 வருஷம் பேசல; பிரிந்த குடும்பம் சேர்ந்தது இப்படித்தான்; மாமன் சூரி வீட்டு ரியல் சம்பவம்!

ஒருவருடைய வாழ்க்கையில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை நடிகர் சூரி தேநீர் இடைவெளி பக்கத்திற்கு அளித்த பேட்டியில் அழுத்தமாக வலியுறுத்தினார். 20-30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வலுவான குடும்பப் பிணைப்பு, காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இன்றைய அவசரமான உலகில், சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள், ஈகோ, மற்றும் தவறான புரிதல்களால் குடும்பங்கள் பிரிந்துவிடுகின்றன. இது பல வீடுகளில் நடக்கக்கூடிய ஒரு சோகமான உண்மை என்றும் கூறினார்.சூரி  தங்களது மாமாவுடனான தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஒரு தாய்க்கு அடுத்தபடியாக, மாமாவுடனான உறவு மிகவும் முக்கியமானது என்றும், மிகவும் வலுவானது என்றும் அவர்கள் விவரித்தனர். இந்த உறவின் ஆழத்தை விளக்க, சூரி தனது சொந்த வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.சூரியின் தாயும் அவரது சகோதரரும், அதாவது சூரியின் மாமா, ஒரு சிறிய ஈகோ காரணமாக 25 ஆண்டுகளாகப் பேசாமல் இருந்தனர். இந்த நீண்ட மௌனம் அந்த குடும்பத்தில் ஒரு பெரிய வலியை ஏற்படுத்தியது. ஆனால், ஒரு நாள் சூரி குடும்பத்தில் நடந்த ஒரு விசேஷ நிகழ்வின் போது, அவருடைய மாமா வீட்டிற்கு வராமல் ஒரு டீக்கடையிலேயே இருந்ததாகவும் தனது தாய் சென்று அழைத்ததாகவும் அவர் கூறினார். அப்போது, கேட்ட ஒரு சாதாரண மன்னிப்பும், பாசமான வார்த்தைகளும் அந்த 25 வருட இடைவெளியை நொடியில் உடைத்து மீண்டும் உறவை இணைத்தது.உங்க வாழ்க்கையிலும் இப்படி ஒரு உறவு இருக்கா❤️சண்டையில் இருந்தபோது  எவ்வளவு உறவுகள் இருந்தாலும் தனது தம்பி வரவில்லை என்றுதான் சூரியின் அம்மா வருத்தப்பட்டு அழுவார் என்றும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி 25 ஆண்டுகளாக தங்களுக்கு தாய்மாமன் யார் என்று தெரியாமல் பத்திரிக்கைகளில் கூட ஒன்றுவிட்ட மாமன் பெயரைத்தான் அச்சடித்தோம் என்றும் கூறினார். அந்த அளவிற்கு தான் எங்கள் உறவு இருந்ததாகவும் பிறகுதான் தெரிந்ததாகவும் தெரிவித்தார். ஆயிரம் உறவுகள் இருந்தாலும் தாய்மாமன் உறவு விவரிக்க முடியாத ஒன்று என்றும் கூறினார். ஒரு சிறிய ஈகோ எப்படி ஒரு குடும்பத்தை இத்தனை வருடங்களாகப் பிரித்து வைத்திருந்தது என்பதை அழகாக விவரித்து கூறினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version