இலங்கை
ராஜபக்ஷர்களுக்கு எதிராக செயற்பட்டால் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்!
ராஜபக்ஷர்களுக்கு எதிராக செயற்பட்டால் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்!
ராஜபக்ஷர்களுக்கு எதிராக செயற்பட்டதால் தான் நல்லாட்சி அரசாங்கம் நெருக்கடிக்குள்ளானது. இந்த அரசாங்கமும் அவ்வாறு செயற்பட்டால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களுக்கு உரிய சிறப்புரிமைகளை வழங்குவது அரசியல் கலாச்சாரத்தின் ஒருபகுதியாகும்.
அரசியல் கலாச்சாரத்தை புறக்கணித்து விட்டு முன்னாள் ஜனாதிபதிகளை பழிவாங்கும் நோக்கத்தில் அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்தை இரத்துச் செய்யும் சட்டவரைபை கொண்டு வந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரம் இலக்காக் கொண்டு அவரை கொழும்பில் இருந்து வெளியேற்றி மெதமுல்லவுக்கு கொண்டு செல்வதற்காகவே இந்த சட்டவரைபு தயாரிக்கப்பட்டுள்ளது.
மஹிந்தவை மெதமுல்லவுக்கு அனுப்பி வைக்கும் சட்டவரைபு என்று பெயர் வைத்திருக்கலாம்
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக செயற்பட்டால் அது அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும்.
ராஜபக்ஷர்களுக்கு எதிராக செயற்பட்டதால் தான் நல்லாட்சி அரசாங்கம் நெருக்கடிக்குள்ளானது.
இந்த அரசாங்கமும் அவ்வாறு செயற்பட்டால் பாரிய நெருக்கடிகளை ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தார்.