இலங்கை

8 ஆம் வகுப்பு மாணவிக்கு 40 வயது நபருடன் திருமணம்; பாடசாலையில் கதறி அழுத மாணவி

Published

on

8 ஆம் வகுப்பு மாணவிக்கு 40 வயது நபருடன் திருமணம்; பாடசாலையில் கதறி அழுத மாணவி

  8 ஆம் வகுப்பு மாணவிக்கு 40 வயது நபரை திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தாய் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம் நந்திகாமா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

அவரது கணவர் இறந்துவிட்டதால் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். அவரது 13வயது மகள் அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

Advertisement

குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலையால் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.

இதன்படி, 40 வயதான ஸ்ரீனிவாஸ் கவுடுவுடன் கடந்த மே மாதம் 28ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.

ஆனால் இந்த திருமணத்தை விரும்பாத சிறுமி, தான் படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement

இதை ஏற்றுக்கொண்டு அவரை கடந்த வாரம் முதல் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளிக்கு சென்ற மாணவி, தனது ஆசிரியர்களிடம் கதறி அழுதபடி தனக்கு திருமணம் ஆனதை கூறியக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சிறுமியிடம் புகாரை பெற்ற போலீசார், சிறுமியின் தாய், கணவன் ஸ்ரீநிவாஸ் கவுடு, புரோக்கர் மற்றும் திருமணத்தை நடத்திய புரோகிதர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement

இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version