சினிமா

CBFC அதிரடி முடிவு கூலி படத்துக்கு A சான்றிதலுக்கு பின்னால் இருக்கும் உண்மை!வெளியான தகவல்!

Published

on

CBFC அதிரடி முடிவு கூலி படத்துக்கு A சான்றிதலுக்கு பின்னால் இருக்கும் உண்மை!வெளியான தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய கூலி திரைப்படம், திரையரங்குகளுக்கு வருவதற்கும் முன் பரபரப்பான விவாதங்களை உருவாக்கியுள்ளது. இத்திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ள “A” சான்றிதழ் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், ஆர்வத்தையும் உருவாக்கியுள்ளது.சாதாரணமாக ரஜினி படம் என்றாலே குடும்பம் முழுக்கப் போய் ரசிக்கக்கூடிய திரைப்பயணமாக இருக்கும். ஆனால் கூலி படத்தில், கிளாமர் அல்லது சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு பதிலாக, அதிகமான வன்முறை மற்றும் கொடூரமான சண்டைக் காட்சிகள் காரணமாகவே இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாம்.சினிமா வட்டாரங்களில் பறந்து வருகிற தகவலின்படி, நாகர்ஜூனாவும், அமீர் கானும் நடித்திருக்கும் காட்சிகள் குறிப்பாக ரத்தம், வன்முறை, கத்தி வீச்சு போன்றவை மிக ரத்தவெறி நிறைந்ததாகவும், இது கூலி படத்திற்கு “A” சான்றிதழை உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது.இதுவரை ரஜினி படங்களுக்கு U/A, U போன்ற சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், கூலிக்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை ரஜினி ரசிகர்கள் ஏற்க முடியாமல் “தக்காளி சட்னி ஊத்தி வைச்சு A வாங்கிட்டீங்களே லோகேஷ்!” என கமெண்ட்டுகளில் புலம்புகிறார்கள்.எல்லாவற்றையும் தாண்டி, இந்த திரைப்படம் ரஜினியின் மாஸ் மற்றும் லோகேஷின் வன்முறை ஸ்டைல் இரண்டையும் இணைத்திருப்பதால், திரைக்கு வந்தவுடன் இளைய ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version