பொழுதுபோக்கு

Coolie Audio launch LIVE: பவர்ஹவுஸ் டூ மோனிக்கா வரை… பட்டையை கிளப்ப போகும் ‘கூலி’ ஆடியோ லாஞ்ச்!

Published

on

Coolie Audio launch LIVE: பவர்ஹவுஸ் டூ மோனிக்கா வரை… பட்டையை கிளப்ப போகும் ‘கூலி’ ஆடியோ லாஞ்ச்!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ”கூலி” படம் வருகிற 14-ம் தேதி முதல் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கூலி படத்தை முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க அனிருத் இசைமைத்துள்ளார். அவரே இவ்விழாவின் நாயகனாக இருப்பார். கூலி படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அமீர் கான் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே நேரத்தில், ரெபா மோனிகா ஜானும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version