சினிமா

அகரம் அறக்கட்டளையின் 15-ம் ஆண்டு நிறைவு…! நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி பேச்சு…!

Published

on

அகரம் அறக்கட்டளையின் 15-ம் ஆண்டு நிறைவு…! நடிகர் சூர்யாவின் நெகிழ்ச்சி பேச்சு…!

கல்வியை அடிப்படையாகக் கொண்டு சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கும் நோக்குடன் பயணித்துவரும் அகரம் அறக்கட்டளை, தனது 15-ம் ஆண்டு விழாவைக் சிறப்பாகக் கொண்டாடியது. விழாவில் கலந்து கொண்ட நடிகரும், அறக்கட்டளையின் Founding Trustee-யுமான சூர்யா, நிகழ்வின் மையக்காட்சியாக திகழ்ந்தார்.நிகழ்வில் உரையாற்றிய சூர்யா, நெகிழ்ச்சியுடன் கூறியதாவது: “என்னோட நன்றியுணர்வும் உங்க விடாமுயற்சியும்தான் அகரம்… இந்த அழகான பயணத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி.”அகரம் அறக்கட்டளை 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, தமிழகத்தில் பல ஆயிரக் கணக்கான மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கி வருகிறது. குறிப்பாக, முதன்முறையாக கல்வி பெறும் மாணவர்களுக்கு எதிர்காலத்திற்கான வழிகாட்டியாக அமைந்துள்ளது.விழாவில் பல பயனாளிகள் தங்களது வாழ்க்கையை மாற்றியதற்கான பயணங்களை பகிர்ந்தனர். மேலும், ஆசிரியர்கள் மற்றும் தொண்டர்களும் பாராட்டப்பட்டனர். சூர்யா, நிகழ்வின் போது கூறியதாவது: “இது வெறும் உதவிக்கே அல்ல; ஒருவரின் திறமையை நம்பி, அவரோடு நடந்துசெல்லும் ஒரு பயணம்தான்.” எனும் அவரது வார்த்தைகள், ஒவ்வொருவரின் இதயத்தையும் தொட்டன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version