உலகம்

இஸ்ரேலின் அனைத்து விமான சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிப்பு!

Published

on

இஸ்ரேலின் அனைத்து விமான சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிப்பு!

இஸ்ரேலுடனான 12 நாள் மோதலின் தொடக்கத்தில் விதிக்கப்பட்டிருந்த மீதமுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் ஈரான் நீக்கியுள்ளதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (CAO) அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நடவடிக்கைகள் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளதாக CAO தனது வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Advertisement

தெஹ்ரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படத் தொடங்கியுள்ளது என்பதையும் அது உறுதிப்படுத்தியுள்ளது.

“இனிமேல், அனைத்து விமான நிறுவனங்களும் பயண நிறுவனங்களும் மீண்டும் 24 மணி நேர விமான சேவைகளையும் டிக்கெட் விற்பனையையும் வழங்க முடியும்” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜூன் 13 அன்று ஈரான் தனது வான்வெளியை மூடியது. 12 நாள் மோதல் ஜூன் 24 அன்று போர் நிறுத்தத்துடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version