சினிமா

எனக்கும் சத்யராஜுக்கும் இடையே முரண்பாடு தான்..! ஆனா… நடிகர் ரஜினி விளக்கம்..!

Published

on

எனக்கும் சத்யராஜுக்கும் இடையே முரண்பாடு தான்..! ஆனா… நடிகர் ரஜினி விளக்கம்..!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகிய ‘கூலி’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.இந்த விழாவின் முக்கிய ஈர்ப்பாக காணப்பட்டது ரஜினிகாந்தின் உரை. வழக்கம்போல் கண்ணியத்துடனும், நேர்த்தியுடனும் விழாவில் நடிகர் சத்யராஜ் குறித்து பேசிய கருத்துகள் பெரும் விவாதத்திற்கு காரணமாகியுள்ளது.விழாவில் பேசிய ரஜினிகாந்த், தனக்கும் சத்யராஜுக்கும் இடையே இருந்த கருத்து முரண்பாடுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதன்போது, “எனக்கும் சத்யராஜிற்கும் கருத்தியல் ரீதியா முரண்பாடு இருக்கலாம். ஆனால் அவர் மனசில பட்டதை சொல்லிட்டு போயிடுவாரு. மனசில பட்டதை சொல்லிட்டு போறவங்கள நம்பலாம். ஆனா, உள்ளேயே வச்சிட்டு இருக்கிறவங்கள நம்ப முடியாது.” என்றார் ரஜினி. இந்த வார்த்தைகள் விழா மன்றத்தில் இருந்த அனைவரையும் சில நொடிகள் அமைதியாக்கின. ரஜினிகாந்தின் இந்த உரையை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பலவிதமான கேள்விகள் எழுந்துள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version