பொழுதுபோக்கு

ஒரே குடும்பத்தில் 3 நடிகைகள்; மூவருடனும் டூயட் பாடிய ஒரே நடிகர்: இந்த ஸ்டார் யார் தெரியுமா?

Published

on

ஒரே குடும்பத்தில் 3 நடிகைகள்; மூவருடனும் டூயட் பாடிய ஒரே நடிகர்: இந்த ஸ்டார் யார் தெரியுமா?

திரைத்துறையில் ஒரு குடும்பத்தில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட நடிகைகள் சினிமாவில் நடித்திருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒரே நடிகருக்கு ஜோடியாக நடித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஆனால் நடிகை நக்மா முதல் ஜோதிகா வரை அவரது குடும்பத்தில் 3 பேரும் ஒரு நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். அவர் யார் தெரியுமா?தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நக்மா. முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், 1990-ம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளியான பாஹி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். 1994-ம் ஆண்டு வெளியான ஷங்கரின் காதலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், கடைசியாக, அஜித் நடிப்பில் சிட்டிசன் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.நக்மாவுக்கு ஒன்றுவிட்ட சகோதரி தான் ஜோதிகா. இந்தி படத்தில் அறிமுகமான இவர், அஜித்தின் வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தொடர்ந்து அஜித் சூர்யா, விக்ரம் விஜய், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுததார். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார்.ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரிதான் ரோஷ்னி. 1997-ம் ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளியான சிஷ்யா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரோஷ்னி. இவர் தான் நடிகை ஜோதிகாவின் உடன்பிறந்த சகோதரி. சிஷ்யா படத்திற்கு பிறகு மாஸ்டர் என்று தெலுங்கு படத்திலும், குலாபி என்ற கன்னட படத்திலும் ரோஷ்னி நடித்திருந்தார். கடைசியாக அருண் விஜய் நடிப்பில் கடந்த 1998-ம் ஆண்டு வெளியான துள்ளி திரிந்த காலம் என்ற படத்தில் நடித்திருந்தார்.தற்போது நக்மா, ரோஷ்னி இருவரும் திரைத்துறையில் இருந்து விலகிவிட்ட நிலையில், ஜோதிகா மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார். 1992-ம் ஆண்டு நக்மா நடிகர் சிரஞ்சீவியுடன் க்ரான மொஹடு, ரிக்சாவோடு, மூன்று மொனகல்லு ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெளியான ரமணா படத்தின் ரீமேக்கான தாகூர் படத்தில் சிரஞ்சீவியுடன் ஜோதிகா இணைந்து நடித்துள்ளார். அவரது அக்கா ரோஷ்னி, மாஸ்டர் என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்திருந்தார். இப்படி ஒரே குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த 3 நடிகைகளுடன் இணைந்து நடித்தவர் சிரஞ்சீவி என்று சொல்லலாம்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version