சினிமா
கணவரை இழந்த பெண்களின் வாழ்க்கைக்கு ஒளி கொடுத்த தங்கதுரை.! நெஞ்சை நெகிழவைத்த வீடியோ.!
கணவரை இழந்த பெண்களின் வாழ்க்கைக்கு ஒளி கொடுத்த தங்கதுரை.! நெஞ்சை நெகிழவைத்த வீடியோ.!
தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் தன்னிச்சையான ஒளியை வீசிய நடிகர் தங்கதுரை, தற்போது சமூக சேவைகளின் வழியாக மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். சமீபத்தில்,கணவர் இல்லாமல் குடும்பத்தை காப்பாற்ற கஷ்டப்படும் ஏழை குடும்ப பெண்களுக்கு வீடு தேடி சென்று தையல் மெஷின்களை வழங்கிய வீடியோ, இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.கணவரை இழந்து தனியாக வாழும் பெண்கள், நிதிக்கட்டுப்பாடுகளால் குடும்பத்தை முன்னேற்ற முடியாமல் தடுமாறுகிறார்கள். இவர்களில் பலர் தையல் போன்ற சிறிய தொழில் மூலமாகவே வீட்டு செலவுகளை சமாளிக்க முயல்கின்றனர்.ஆனால் தையல் வேலை தெரிந்தாலும், ஒரு தையல் இயந்திரம் வாங்க முடியாமல் வீட்டில் முடங்கி வாழும் பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கியவராக நடிகர் தங்கதுரை விளங்குகின்றார். இந்த செயல் குறித்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்டதும், சில மணி நேரத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.