சினிமா

குணசேகரனின் கொடூரம் எல்லை மீறியது…! உயிருக்கு போராடும் ஈஸ்வரி…!

Published

on

குணசேகரனின் கொடூரம் எல்லை மீறியது…! உயிருக்கு போராடும் ஈஸ்வரி…!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2 சீரியல் தற்போது திருப்பங்கள்  நிறைந்துள்ளது. குடும்பத்தில் எல்லாம் தானே முடிவு செய்ய வேண்டும் என்ற அகங்காரத்தில், குணசேகரன் தனது மகனான தர்ஷனுக்கு கல்யாணம் நடத்த முடிவு செய்கிறார். ஆனால் ஈஸ்வரி, “என்னுடைய பையனை பலியாடாக்க முடியாது” என்ற உறுதியுடன் தர்ஷனை தர்ஷனின் காதலியுடன் திருமணம் செய்ய திட்டமிடுகிறார்.இந்த சூழ்நிலையில், பார்கவி கனடா செல்ல திட்டமிட்டு தப்பிக்க முயல்கிறார். ஆனால் ஜனனி, பார்கவியை தேடிப் பிடித்து, தர்ஷனுடன் கல்யாணம் நடத்துவேன் என்று உறுதியுடன் கும்பகோணத்திற்கு பயணிக்கிறார். பார்கவியைக் கண்டுபிடித்து மனம் மாற்ற முயற்சிக்கும் ஜனனி, திடீரென ஈஸ்வரி உயிருக்கு போராடுகிறார் என்ற தகவலை அறிந்து வீடு  திரும்புகிறார்.மிகுந்த அதிர்ச்சியளிக்கும்படி, ஈஸ்வரியின் நிலைக்கு காரணம் வேறு யாரும் அல்ல, குணசேகரனே! தனது பிடிவாதத்தை நிறைவேற்ற ஈஸ்வரியை கழுத்து நெறித்து தாக்குகிறார். உயிருடன் போராடும் ஈஸ்வரியை தர்ஷன் மற்றும் நந்தினி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள் 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version