சினிமா
சர்ச்சையை கிளப்பிய ரம்யாபாண்டியன் பகிர்ந்த ஹெல்த் டிப்ஸ்!மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
சர்ச்சையை கிளப்பிய ரம்யாபாண்டியன் பகிர்ந்த ஹெல்த் டிப்ஸ்!மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
சினிமா ரசிகர்களிடம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகை ரம்யா பாண்டியன், ‘ஜோக்கர்’ படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர். தேசிய விருது பெற்ற இந்த படத்தில் அவர் நடிப்பால் கவனம் பெற்றார். பின்னர் ‘டம்மி பட்டாசு’, ‘ஆண் தேவதை’ உள்ளிட்ட படங்களில் நடித்ததுடன், ‘குக் வித் கோமாளி’ மற்றும் ‘பிக்பாஸ் சீசன் 4’ ஆகிய டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பிரபலமானார்.சமீபத்தில், ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஹெல்த் டிப்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சித்த வைத்தியத்திலிருந்து தெரிந்து கொண்ட ஒரு முக்கிய தகவலை அவர் தெரிவித்தார். “கல்லுப்பை (Pink Salt) வெயிலில் இரண்டு முதல் மூன்று நாட்கள் காயவைத்து சாப்பிட்டால், அதில் விட்டமின் டி சேரும்” என அவர் கூறியுள்ளார்.இத்தகவல் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இது விஞ்ஞான ரீதியாக சரியா? அல்லது இது தவறான தகவலா? என்ற கேள்விகளை எழுப்பி விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவாதம் சிலரிடையே சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்த, சிலரிடையே சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.