பொழுதுபோக்கு
சார் ‘மிளகா’ படம் நீங்க பண்ணதா? கையை கொடுங்க; ரவி மரியாவுக்கு ரயிலில் சர்ப்ரைஸ் கொடுத்த ரசிகர்!
சார் ‘மிளகா’ படம் நீங்க பண்ணதா? கையை கொடுங்க; ரவி மரியாவுக்கு ரயிலில் சர்ப்ரைஸ் கொடுத்த ரசிகர்!
இயக்குனராக தான் இயக்கிய மிளகா படத்தை பார்த்த ஒரு ரயில் பயணி தன்னிடம் நடந்துகொண்ட விதம் தன்னால் மறக்கவே முடியாத ஒரு அனுபவம் என்று நடிகரும் இயக்குனருமான ரவி மரியா கூறியுள்ளார். இந்த அனுபவம் குறித்து அவர் கூறியுள்ள ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி திரைப்படத்தின் மூல் உதவி இயக்குனராக இருந்தவர் ரவி மரியா. தொடர்ந்து, ஜீவா நடிப்பில், 2002-ம் ஆண்டு வெளியான ஆசை ஆசையாய் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், எஸ்.ஜே.சூர்யா இயக்கிய நியூ, அன்பே ஆருயிரே ஆகிய படங்களில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். 2006-ம் ஆண்டு வெளியான வெயில் படத்தில் முக்கிய வில்லனாக நடித்தார்.இந்த படம் பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து, அடுத்தடுத்து வில்லனாக ரவி மரியா பல வாய்ப்புகளை பெற்றிருந்தார். அந்த வகையில் இவர் நடித்த பழனி, மாயாண்டி குடும்பத்தார், சண்டை, கோரிப்பாளையும் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார். 2012-ம் ஆண்டு வெளியான மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் காமெடி வில்லனாக நடித்த ரவி மரியா தற்போதுவரை, காமெடி வில்லன் கேரக்டரில் தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.ஜீவா நடிப்பில் ஆசை ஆசையாய் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி மரியா, அடுத்து இயக்கிய படம் மிளகா. நட்டி, பூங்கொடி, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், ஒரே ஷெட்யூலாக 52 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது. காமெடி கலந்த ஆக்ஷன் படமாக வெளியான இந்த படத்தில் ஹீரோ செய்த ஒரு தவறினால், ஹீரோயின் குடும்பம் வில்லனிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும்.இந்த குடும்பத்தை ஹீரோவே எப்படி காப்பாற்றுகிறார் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தை இயக்கிய ரவி மரியா கஜேந்திரன் என்ற முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் குறித்து வாவ் தமிழா யூடியூப் சேனலில் பேசியுள்ள ரவி மரியா, இந்த படம் எடுத்து 14 வருடம் ஆகிறது. யாராவது என்னிடம் ஆசை ஆசையாய் படத்திற்கு பிறகு நீங்க என்ன படம் பண்ணீங்க என்று கேட்டால் மிளகா என்று சொன்னதும், அதில் நீங்க நடிச்சிருந்தீங்க, அது உங்க படமா என்று ஆச்சியமாக கேட்கிறார்கள்.A post shared by Wow Tamizhaa (@wowtamofficial)ஒருமுறை, ரயிலில் செல்லும்போது நான் வாக்கிங் போகும்போது வரும் 3 பேர் என்னை சந்தித்தார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது நான் இயக்கிய படங்கள் குறித்து கேட்டார்கள். பேசிக்கொண்டு இருக்கும்போது மேலே ஒருவர் தூங்கிக்கொண்டு இருந்தார். நான் மிளகா படம் டைரக்ட் பண்ணேண் என்று சொன்னதும் டக்குனு கீழே வந்து, கையை கொடுத்துவிட்டு மிளகா என் ஆல்டைம் ஃபேவரெட் படம் சார் என்று சொன்னது என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.