விளையாட்டு
செஸ் உலகக்கோப்பை: 25 ஆண்டுக்குப் பின் இந்தியாவில் நடப்பது பெரிய நிகழ்வு: குகேஷ் பேட்டி
செஸ் உலகக்கோப்பை: 25 ஆண்டுக்குப் பின் இந்தியாவில் நடப்பது பெரிய நிகழ்வு: குகேஷ் பேட்டி
சென்னை நொளம்பூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் உலகின் இளம் எவரெஸ்ட் மலையற்ற வீரர் என்ற சாதனையை படைத்துள்ள ஆசிஷ் என்பவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வேலம்மாள் பள்ளியில் பயின்ற மாணவர் என்பதால் பள்ளியின் சார்பில் இந்த பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் வேலம்மாள் பள்ளியில் பயின்று உலக செஸ் சாம்பியன் ஆக வெற்றி பெற்ற குகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சிகள் இளம் வயதில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்த ஆஷிஸை கவுரவிக்கும் வகையில் வேலம்மாள் கல்வி குடும்பம் சார்பில் 40 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. நிகழ்வின் போது மறைந்த மாணவனின் தந்தையை ஏஐ தொழில்நுட்பத்தில் காணொளி மூலம் கண் முன் கொண்டு வந்து மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆஷிஷ், “உலக அளவில் இளம் வீரர்களின் ஏழாவது வீரராக எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தோம் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் குழுவை வழி நடத்தும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டதால் அதை சிறப்புடன் செய்து முடித்தோம்.பெற்றோர்கள் என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகம் என் மீது வைத்த நம்பிக்கை காரணமாக சாதனையை செய்து முடித்தேன். பள்ளி தாளாளர் என்னுடைய கனவு அவருடைய கனவாக எடுத்து சாதனை புரிய உதவி செய்தார். 37 நாட்களில் ஏறி முடித்தோம் மலை ஏறுவதற்கான தன்மைக்கு மாற வேண்டும் அதற்காக பிரதியாக பயிற்சிகளை மேற்கொண்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு உடலை மாற்றி அமைத்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறி முடித்தேன்” என தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், “உலகில் பெரிய மலை சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி முடித்து விட்டோம் அதற்கு அடுத்ததாக அதைவிட உயரமாக உள்ள சிகரத்தில் ஏற வேண்டும் என எனக்கு இலக்கு வைத்துள்ளேன். அடுத்த இலக்காக இமயமலை தொடரில் உள்ள அன்னபூர்ணா சிகரத்தில் ஏறி சாதனை படைக்க திட்டமிட்டுள்ளேன். அன்னபூர்ணா சிகரத்தில் ஐந்து பேர் ஏறினால் அதில் மூன்று பேர் உயிரிழக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே சவால் நிறைந்த சிகரமாக இருப்பதால் அடுத்து இலக்காக அதை நிர்ணயித்து உள்ளேன்” என கூறினார். உலக செஸ் சாம்பியன் குகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “25 வருடங்கள் கழித்து நவம்பரில் இந்தியாவில் உலக கோப்பை நடைபெற உள்ளது. செஸ் போட்டியில் அதிகளவில் பெரிய நாக்கவுட் இல்லாததால் பெரிய நாக் அவுட் தொடர்பான உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுவது பெரிய நிகழ்வு. உலகக் கோப்பை மகளிர் தொடர் முடிந்த பிறகு இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்திய வீரர்கள் அதில் அதிகளவு பங்கேற்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இந்த தொடர் உற்சாகம் கொடுக்கக்கூடிய தொடராக அமையும்” என தெரிவித்தார்.செஸ் உலகக்கோப்பை: 25 ஆண்டுக்குப் பின் இந்தியாவில் நடப்பது பெரிய நிகழ்வு: குகேஷ் பேட்டி pic.twitter.com/8aCLdfkkDc