இலங்கை
தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்பில் மாறுவதற்கான வாய்ப்பு!
தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்பில் மாறுவதற்கான வாய்ப்பு!
தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்புகளுக்கு இடையில் மாறுவதற்கான சேவையை அடுத்த வருடம் முதல் அமுல்படுத்த இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்புகளுக்கு இடையில் மாறுவதற்கான சேவையை செயல்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி ஆணைக்குழு முதலில் தொலைபேசி இயக்க நிறுவனங்களுடன் கலந்துரையாடி, தொலைபேசி எண்ணை மாற்றாமல் வலையமைப்புகளுக்கு இடையில் மாறுவதற்கான சேவையை செயல்படுத்த திட்டத்தைத் தயாரித்தது.
இந்த சேவை செயல்படுத்தப்பட்டதும், பொதுமக்களுக்கு இது குறித்து அறிவிக்கப்படும் என்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.