இலங்கை

நாமலின் புதிய அரசியல் வியூகம் – முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி குழுவினருடன் சந்திப்பு!

Published

on

நாமலின் புதிய அரசியல் வியூகம் – முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி குழுவினருடன் சந்திப்பு!

இலங்கை  பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழு, கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது நாளையதினம் (04.08.2025) இடம்பெறவுள்ளது.

Advertisement

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மொட்டுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 25 பேர் கொண்ட குழு இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு பொதுவான உடன்பாட்டை எட்டுவது குறித்து இருவரும் இணைந்து விவாதிக்கவுள்ளதாக கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு உடன்பாட்டை எட்டிய பிறகு, கட்சியுடன் இருக்கும் அனைத்து இடதுசாரி அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களையும், பின்னர் பிற அரசியல் கட்சிகள் மற்றும் பிற எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பரந்த இடதுசாரி சக்தியைக் கட்டியெழுப்புவதற்கான விவாதங்கள் தொடங்கும் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version