சினிமா
நாளை முதல் தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம்…காரணம் என்ன தெரியுமா?
நாளை முதல் தெலுங்கு திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம்…காரணம் என்ன தெரியுமா?
தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் உயர்த்தப்பட்ட சம்பளத்தை வழங்காதிருக்கக் காரணமாக, நாளை (ஆகஸ்ட் 4) முதல் படப்பிடிப்புகளை நிறுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கங்களை ஒருங்கிணைக்கும் தெலுங்கு திரைப்பட கூட்டமைப்பு, சம்பள உயர்வு குறித்து ஏற்கனவே பலமுறை தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளது. ஆனால் அந்த கோரிக்கைகளுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.”நாங்கள் எதிர்பார்த்த மாதிரி சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. நாளை முதல் எங்கள் உறுப்பினர்கள் எந்த ஒரு படப்பிடிப்பிலும் பங்கேற்கமாட்டார்கள். சம்பள உயர்வு உடனடியாக — அதே நாளில் — வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் படப்பிடிப்பு நிறுத்தம் தொடரும்,” எனத் தெலுங்கு திரைப்பட கூட்டமைப்பின் பேச்சாளர் கூறினார்.இந்த வேலை நிறுத்தம் தெலுங்கு திரையுலகத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது. முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இந்த நிலைமையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பார்களா என்பதைக் காலமே தீர்மானிக்க வேண்டும்.