உலகம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் வரை போரை கைவிட மாட்டோம் – ஹமாஸ்

Published

on

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் வரை போரை கைவிட மாட்டோம் – ஹமாஸ்

இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது.

இப்போரில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

Advertisement

இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் இதுவரை முடிவு எட்டப்பட வில்லை. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்து உள்ளது. 

இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினர் தங்களது ஆயுதங்களை கீழே போட விருப்பத்தை வெளிப்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காப் தெரிவித்தார்.

Advertisement

ஆனால் அதை ஹமாஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் வரை இஸ்ரேலுக்கு எதிரான போரை கைவிட மாட்டோம்.

ஜெருசலேமை தலைநகராக கொண்ட ஒரு சுயாதீனமான, முழு இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாடு நிறுவப்படாதவரை ஆயுதங்களை கீழே போடுவதற்கு நாங்கள் உடன்பட மாட் டோம். எங்களது உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது எனக் கூறப் பட்டுள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version