உலகம்

ரஷ்யாவில் 475 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை

Published

on

ரஷ்யாவில் 475 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் உள்ள எரிமலை 475 ஆண்டுகளில் முதல்முறையாகக் குமுறத் தொடங்கியுள்ளது.

கிரஷ்னெனின்கோவ் எரிமலை வெடித்துச் சீறிய புகைப்படங்களை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Advertisement

இதற்கு முன்பு15ஆம் நூற்றாண்டில், அதாவது 1550ல் வெடித்துச் சிதறிய இந்த எரிமலை தற்போது மீண்டும் குமுறத் தொடங்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.

வெடித்து சிதறிய அந்த எரிமலை கக்கிய சாம்பல் 6 கிலோமீட்டர் தொலைவுவரை எட்டியது என்றும் வேறு எந்த அச்சுறுத்தலும் நிகழவில்லை என்றும் அந்நாட்டின் அவசரகால அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

எரிமலை அமைந்துள்ள வட்டாரத்தைக் கடந்த வாரம் 8.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதன் தொடர்பிலும் அதனைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையின் தாக்கத்தாலும் இந்த எரிமலைச் சீற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version