இலங்கை

வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமம்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய சேவை

Published

on

வெளிநாட்டினருக்கான ஓட்டுநர் உரிமம்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய சேவை

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டியினருக்காக ஓட்டுநர் உரிமம் வழங்கும் புதிய சேவை இன்று (3) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட உள்ளது.

இந்த புதிய நடவடிக்கையின் மூலம், சுற்றுலாப் பயணிகள் தங்களின் பயணங்களை சுயமாக மற்றும் சீரான முறையில் மேற்கொள்வதற்கு மேலும் வசதியாகும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுவரை இந்த சேவை வேரஹெரா பகுதியில் உள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் மட்டுமே கிடைத்தது.

புதிய சாளரம் திறக்கப்படுவதன் மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடையும் வெளிநாட்டியினர், தங்கள் பயணத்திற்கேற்ப உடனடியாக உரிமம் பெற்றுத் தங்களே வாகனங்களை ஓட்ட முடியும்.

இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் வாடகை வாகனங்கள், குறிப்பாக இலகுரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளை பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, புதிய முறையில் இலகுரக வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உரிமங்களுக்கே அனுமதி வழங்கப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த புதிய சேவையின் மூலம் சுற்றுலாப் பயணிகள் நேரமும் செலவும் மிச்சப்படுத்த முடியும் என்பதே இலங்கை அரசின் நோக்கம் ஆகும்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version