உலகம்

112 டிரோன்கள் மூலம் ரஷ்ய ராணுவ தளங்களை அழித்த உக்ரைன்

Published

on

112 டிரோன்கள் மூலம் ரஷ்ய ராணுவ தளங்களை அழித்த உக்ரைன்

ரஷியா-உக்ரைன் இடை யேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷியா வில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் எரிவாயு குழாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 

ரஷியாவின் தென் மேற்கு நகரமான பிரி மோர்ஸ்கோ-அக்தார்ஸ் கில் உள்ள ஒரு ராணுவ விமான நிலையத்தை தாக்கியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

Advertisement

இங்கு உக்ரைனை தாக்க டிரோன்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. 

டிரோன் தாக்குதலில் அந்த பகுதி தீப்பிடித்து எரிந்தது என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. ரஷ்யாவின் தெற்கு பென்சா பிராந்தியத்தில் உள்ள ராணுவ டிஜிட்டல் தொலைத் தொடர்பு, விமான சாதனங்கள், கவச வாகனங்கள் மற்றும் கப்பல்களை தயாரிக்கும் நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும் ஒரு எரிவாயு குழாய் மீதும் தாக்குதல் நடந்தது. உக்ரைனின் டிரோன் தாக்கு தலில் 3 பேர் பலியானார்கள்.

Advertisement

இதற்கிடையே உக்ரைன் ஏவிய 112 டிரோன்களை ரஷிய எல்லையில் அழித்த தாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. நள்ளிரவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை ராணுவம் முறியடித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.

உக்ரைன் போரை முடி வுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

இதற்காக ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து கெடுவை தெரிவித்து இருந்தார். ஆனால் அதை ரஷியா ஏற்கவில்லை. இதனால் உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியா-அமெரிக்கா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version