சினிமா
அப்செட்டில் நடிகர் தனுஷ்!! கடும் கோபத்துடன் வெளியிட்ட அறிக்கை.. என்ன ஆனது?
அப்செட்டில் நடிகர் தனுஷ்!! கடும் கோபத்துடன் வெளியிட்ட அறிக்கை.. என்ன ஆனது?
தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி இன்று ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் தனுஷ். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், சிங்கர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட தனுஷ் நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியானது.ஆனால், இப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. நடிகர் தனுஷ் மற்றும் சோனம் கபூர் நடிப்பில் வெளியான ஹிந்தி படம் ராஞ்சனா.2013ல் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெற்றது. இந்த படம் தனுஷ் கெரியரில் முக்கிய படமாக இருந்து வருகிறது. தற்போது ராஞ்சனா படத்தின் கிளைமாக்ஸை ஏஐ மூலமாக மாற்றம் செய்து ரீரிலீஸ் செய்து இருக்கின்றனர்.AI மூலமாக இப்படி கதையை மாற்றியது குறித்து தனுஷ் கோபமாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.அதில், “இது என்னை முற்றிலும் பாதித்து இருக்கிறது. நான் எதிர்ப்பு தெரிவித்த பின்பும் அவர்கள் இப்படி செய்து இருக்கிறார்கள். 12 வருடங்களுக்கு முன்பு நான் ஒப்புக்கொண்ட படம் இது இல்லை. வருங்காலத்தில் இதை தடுக்க சட்டங்கள் வர வேண்டும்” என தனுஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.