இலங்கை
அரச ஊழியர்களுக்கு வெளியான நற்செய்தி
அரச ஊழியர்களுக்கு வெளியான நற்செய்தி
அரசு ஊழியர்களுக்கு புதிய வீடு கட்ட அல்லது வீடுகளைப் புதுப்பிக்க நிதிக் கடன்கள் வழங்கப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் வீட்டுவசதி பிரச்சினையை அடுத்த 05 முதல் 10 ஆண்டுகளுக்குள் தீர்க்க அரசாங்கம் முயற்ச்சித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (03.08.2025) அனுராதபுரத்தில் வீட்டுவசதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அமைச்சர் வசந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “முந்தைய நிர்வாகங்களைப் போலல்லாமல், சரியான அமைப்பின் மூலம் பொருத்தமான நபர்கள் மட்டுமே இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
“முன்னைய அரசாங்கம் வீட்டுவசதி விளம்பர பிரச்சாரங்களுக்காக மட்டும் 520 மில்லியன் ரூபாய்களை செலவிட்டது. இதுவும் பொதுமக்களின் பணம்தான்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் 140 பேருக்கு உதவி வழங்கி வருவதாகவும், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் நிதிக் கடன்கள் கிடைக்கும் என்றும், 80க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு ரூ. 01 மில்லியன் கடன்கள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.