பொழுதுபோக்கு
இந்த கேரக்டரில் நான் எப்படி நடிக்க முடியும்? இயக்குனரை நிராகரித்த எம்.எஸ்.பாஸ்கர்: அது என்ன கேரக்டர் தெரியுமா?
இந்த கேரக்டரில் நான் எப்படி நடிக்க முடியும்? இயக்குனரை நிராகரித்த எம்.எஸ்.பாஸ்கர்: அது என்ன கேரக்டர் தெரியுமா?
பார்க்கிங் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றிருந்த நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தன்னிடம் வந்த ஒரு படத்தின் கதையில் தனக்கு அந்த கேரக்டர் செட் ஆகாது என்று தவிர்த்தாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் நடிகர், டப்பிங் கலைஞராக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டரகவே மாறி நடிக்கும் வெகு நில நடிகர்களில் முக்கியமானவர். விசு இயக்கத்தில் 1987-ம் ஆண்டு வெளியான திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து, விசு இயக்கிய பல படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்திருந்தார். 1992-ம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான முதல் குரல் என்ற படத்தில் நடித்திருந்தார்.அதன்பிறகு சினிமாவில் நடிக்காத எம்.எஸ்.பாஸ்கர், சின்னத்திரை பக்கம் திரும்பினார். இதில் நம் குடும்பம், விழுதுகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தாலும், 2000 முதல் 2006 வரை ஒளிபரப்பான சின்னப்பாப்பா பெரிய பாப்பா என்ற சீரியலில் இவர் நடித்த பட்டாபி கேரக்டர் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய பிரபலமான கேரக்டராக இருக்கிறது. அதன்பிறகு 2002-ம் ஆண்டு டும் டும் டும் என்ற படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்த எம்.எஸ்.பாஸ்கர், அதன்பிறகு பல வெற்றிப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.அந்த வகையில் இவர் நடித்த, துப்பாக்கி முணை, எட்டு தோட்டாக்கள், பார்க்கிங் என ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையிலான கேரக்டர்களில் நடித்திருப்பார். தற்போது பார்க்கிங் படத்திற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்றுள்ள எம்.எஸ்.பாஸ்கர் இது குறித்து கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துகொண்டார்.அதில் பேசிய அவர், விருது கிடைக்கும் என்று எப்போதோ சொன்னார்கள். ஆனால் நான் அதை பற்றி யோசிக்கவில்லை. கிடைத்தால் சந்தோஷம். கிடைக்கவில்லை என்றால் வருத்தம் இல்லை. இன்னும் கடுமையாக உழைக்க தயாராக இருக்கிறேன். சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடித்தபோதே மக்கள் என்னை அங்கீகரித்துவிட்டார்கள். அதுவே எனக்கு பெரிய விருது தான். முதலில் நான் மக்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். எனக்கு வரும் கேரக்டரை நான் ஒழுங்காக நடிக்க வேண்டும் என்பது மட்டும் தான் நினைப்பேன்.காமெடியாக, சீரியஸாக, கோபமாக இவர் நடிப்பார் என்று இயக்குனர் என் மீது வைக்கும் நம்பிக்கைக்கு, நான் நன்றி சொல்லி ஆக வேண்டும். அதேபோல் என் மனதை பாதிக்காத எந்த கேரக்டரிலும் நான் நடிக்க மாட்டேன். ஒரு இயக்குனர் என்னிடம் வந்து கதை சொன்னார். நான் அவரை பார்த்துக்கொண்டே இருந்தேன். இல்ல சார் நீங்க இந்த கேரக்டரில் நடிக்க மாட்டீங்க என்று பலரும் சொன்னார்கள் சார் என்று சொன்னார். இதை கட்ட நான் சொன்னாங்கல தம்பி இந்த கேரக்டரை நான் எப்படி பண்ணுவேன்,?ஒரு குழந்தையை பலாத்காரம் செய்வது போன்ற கேரக்டர் அது. துப்பாக்கி முணை படத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான பழிவாங்க புறப்படும் கேரக்டர். அதேபோல் பொள்ளாச்சி சம்பவம் குறித்து நான் குரல் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். இதை நான் செய்தால் நன்றாக இருக்காது என்று சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார். இந்த வரிசையில் பல கேரக்டர்களை நான் நிராகரித்திருக்கிறேன். 8 தோட்டாக்கள் கதை சொன்னஉடனே நான் பண்றேனு சொல்லிட்டேன் என்று எம்.எஸ.பாஸ்கர் கூறியுள்ளார்