இலங்கை
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து!
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து!
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தர்மபுரம் ஏ – 35 பிரதானி வீதியின் புதுகுடியிருப்புப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தர்மபுரம் ஏ -35 பிரதான வீதியின் ஊடாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும் அதே திசையில் இருந்து பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து நிகழ்நதுள்ளது.
பெண்ணொருவர் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை குறுக்கெடுத்து செல்ல முற்பட்ட வேளையே இவ்வாறு விபத்திற்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் தர்மபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். விபத்து தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.