சினிமா
இளைஞர்களின் கனவு கன்னி மாளவிகா மோகனனின் சொத்து மதிப்பு! முழு விவரம்..
இளைஞர்களின் கனவு கன்னி மாளவிகா மோகனனின் சொத்து மதிப்பு! முழு விவரம்..
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் வெளிவந்த பேட்ட, மாஸ்டர், மாறன், தங்கலான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக கார்த்தியுடன் இணைந்து சர்தார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.கோலிவுட் முதல் பாலிவுட் வரை தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள மாளவிகா மோகனன், இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். இந்த நிலையில், இன்று மாளவிகாவிற்கு பிறந்தநாள். தனது 32வது பிறந்தநாளை கொண்டாடும் மாளவிகா மோகனனுக்கு தங்களது வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.பிறந்தநாள் கொண்டாடும் மாளவிகாவின் சொத்து மதிப்பு விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க. இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 16 கோடி முதல் ரூ. 20 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. மேலும், ரூ. 4 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.Mercedes ML 350 – ரூ. 50 லட்சம், BMW – ரூ. 2.60 கோடி மற்றும் Audi Q7 ரூ. 81 லட்சம் ஆகிய சொகுசு கார்களை சொந்தமாக வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதுவே நடிகை மாளவிகா மோகனனின் மொத்த சொத்து மதிப்பு விவரம் ஆகும்.