இலங்கை
இளைஞர்களுக்கான அரசியல் பன்முகத்தன்மை மற்றும் டிஜிற்றல் செயல்வாதம் பயிற்சி!
இளைஞர்களுக்கான அரசியல் பன்முகத்தன்மை மற்றும் டிஜிற்றல் செயல்வாதம் பயிற்சி!
ஐரோப்பிய யூனியனின் நிதிப்பங்களிப்பில், Sri Lanka Unites அமைப்பின் வழியாக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றமான அரசியல் பன்முகத்தன்மை பயிற்சி (Advance Political Pluralism Training – APPT) கடந்த ஒரு வருடமாக நடைப்பெற்று வந்தது.
அதன் இறுதி நிகழ்வாக நேற்றையதினம் கிளிநொச்சியில் Sri lanka Unites வடமாகாண நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் இளைஞர் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த பயிற்சி நெறியானது வடமாகாணத்தைச் சேர்ந்த 20 இளைஞர்களை அரசியல் விழிப்புணர்வு, ஜனநாயக பங்கேற்பு மற்றும் மனித உரிமை கற்றல் போன்ற துறைகளில் திறமையுள்ளவர் ஆக்குவதாகும்.