சினிமா
ஈஸ்வரியை கொடூரமாக தாக்கிய குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பு புரொமோ
ஈஸ்வரியை கொடூரமாக தாக்கிய குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பு புரொமோ
சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக தற்போது இருந்து வருகிறது எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கிய இந்த தொடரில் ஆதி குணசேகரன் vs பெண்கள் என கதை தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.தற்போது, தர்ஷன் திருமணம் குறித்து ஈஸ்வரி நேரடியாக குணசேகரனிடம் பேசுகிறார். அவர்களின் பேச்சு வார்த்தையில் குணசேகரன் ஈஸ்வரியை கொடூரமாக தாக்குகிறார்.இதனால் ரத்த சொட்ட ஈஸ்வரி உயிருக்கு போராட தர்ஷன் மற்றும் நந்தினி அவரை காப்பாற்ற போராடுகிறார்கள்.உதவிக்கு சென்ற கதிரை யாரும் அவர்களிடம் செல்லக் கூடாது என குணசேகரன் கூற அவர் பின்வாங்குகிறார். இதனால், இன்றைய எபிசோடின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.