இலங்கை

ஒற்றுமையின் தூய்மையான பயணம்; 14, 15ஆம் திகதிகளில் யாழில் நடமாடும் சேவை

Published

on

ஒற்றுமையின் தூய்மையான பயணம்; 14, 15ஆம் திகதிகளில் யாழில் நடமாடும் சேவை

ஜனாதிபதியின் எண்ணக்கருவான ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயற்றிட்டத் அங்கமாக ‘இதயபூர்வமாக யாழ்ப்பாணத்துக்கு ஒற்றுமையின் தூய்மையான பயணம்’ எனும் கருப்பொருளிலான நடமாடும் சேவை எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

14ஆம் திகதி பருத்தித்துறை, கரவெட்டி மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலாளர்கள் பிரிவுகளை உள்ளடக்கியவகையில் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலயத்திலும், 15ஆம் திகதி உடுவில், தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசசெயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் உடுவில் பிரதேச செயலகத்திலும் நடைபெறவுள்ளது.

Advertisement

இந்த நடமாடும் சேவையில் ஆட்பதிவுச் சேவை. பிறப்பு இறப்புச் சான்றிதழ் வழங்கும் சேவை, ஓய்வூதியச் சேவை. வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சேவை, மோட்டார் வாகனப் பதிவுகள், கம்பனிப் பதிவுகள். சுகாதாரச் சேவைகள் (கண் பரிசோதனை மற்றும் மருத்துவ சேவைகள்), ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், வடக்கு மாகாணத்தின் சகல அமைச்சுக்கும் உரிய சேவை,பிரதேச செயலகம் மற்றும் உள்ளூராட்சிசபைகளுக்கான சேவைகள் உள்ளிட்ட சேவைகள் இடம்பெறவுள்ளன.

இந்த நடமாடும் சேவைக்கான முன்னாயத்த ஏற்பாடுகளை யாழ்.மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நேரில் சென்று ஆராய்ந்து அறிவுறுத்தல்களைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version