இலங்கை
குருநகரில் சிக்கிய ஹெரோய்ன் தம்பதி; 90 மில்லிகிராம் மீட்பு
குருநகரில் சிக்கிய ஹெரோய்ன் தம்பதி; 90 மில்லிகிராம் மீட்பு
நீண்டகாலமாக ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், குருநகர்ப் பகுதியில் கணவனும், மனைவியும் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து 90 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.