இலங்கை

சிஐடியில் முன்னிலையான அர்ச்சுனா!

Published

on

சிஐடியில் முன்னிலையான அர்ச்சுனா!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னிலையாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தன்னை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக அர்ச்சுனா நேற்றையதினம் வெளியிட்ட காணொளியொன்றில் தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர், குறித்த கடிதம் தமிழாக்கம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்திலிருந்து அர்ச்சுனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கையில் அமர்ந்த அர்ச்சுனா, தான் வெளியிட்ட நேரலையில் ‘தமிழீழ மக்களுக்கு வணக்கம்’ என்று விழித்திருந்தார்.

Advertisement

அவர் தமிழீழம் என்ற சொல்லை பயன்படுத்தியமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version