இலங்கை

தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு ஆரம்பம்!

Published

on

தேசிய மீன்பிடி படகுகள் கணக்கெடுப்பு ஆரம்பம்!

10 வருடங்களுக்குப் பிறகு தேசிய மீன்பிடிப் படகு கணக்கெடுப்பு இன்று  ஆரம்பமாகவுள்ளது. 

இதன் முதல் கட்டம் இன்று பாணந்துறை மீன்பிடி துறைமுகத்தில் ஆரம்பமாகி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

Advertisement

நாட்டின் கடற்கரையோரத்தில் இயங்கும் சுமார் 50,000 மீன்பிடி படகுகளில் புதுப்பிக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்குவதே இந்தக் கணக்கெடுப்பின் பிரதான நோக்கமாகும் எனவும்

இதன் மூலம், தொழிலில் தீவிரமாக ஈடுபடும் படகுகளை அடையாளம் காண்பது, பாவனையில் இல்லாத மற்றும் பழுதடைந்த படகுகளை கரையோரத்திலிருந்து அகற்றி “Clean Sri Lanka” திட்டத்திற்கு ஆதரவளிப்பது, சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்குப் பங்களிப்பது மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கான உரிமங்களை ஒழுங்குபடுத்துவது போன்றவை எதிர்பார்க்கப்படுகின்றன.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version