இலங்கை
பெலவத்தை சீனி தொழிற்சாலையை விற்பனை செய்ய அரசு முயற்சி – விமல் வீரவன்ச குற்றச்சாட்டு!
பெலவத்தை சீனி தொழிற்சாலையை விற்பனை செய்ய அரசு முயற்சி – விமல் வீரவன்ச குற்றச்சாட்டு!
பெலவத்தை சீனித் தொழிற்சாலையை விற்பனை செய்வதற்கு அசராங்கம் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாதிப்புக்கு உள்ளாக்கி, அதில் பிரச்சினைகளை உருவாக்கி, இறுதியில் அந்த ஆலையை விற்பனை செய்ய தயாராகி வருவதாக தெரிவித்தள்ளார்.
பெலவத்தை சீனத் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
முன்னர் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையை மீட்டெடுக்க முடிந்ததற்கு காரணம், ஆலைகளை மீட்கக்கூடிய திறமையான தலைவர்களை நியமித்ததே என்று விமல் வீரவன்ச இதன்போது சுட்டிக்காட்டினார்.
அன்று அனுர குமார திஸாநாயக்க கேசினோ தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் மற்றும் இன்று அவர் ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்’ கேசினோவுடன் கூடிய ஹோட்டலை திறப்பதற்கு செல்வது குறித்தும் விமல் வீரவன்ச இதன்போது கருத்து தெரிவித்தார்.
அதேபோல், இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் பணியை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு ஒப்படைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சி குறித்தும் விமல் வீரவன்ச இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பல உண்மைகளை அம்பலப்படுத்தினார்.