இலங்கை
பொலிஸ் ஆட்சேர்ப்பில் முறைகேடு ; அம்பலப்படுத்திய எம்.பி
பொலிஸ் ஆட்சேர்ப்பில் முறைகேடு ; அம்பலப்படுத்திய எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இன்று கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் உப பொலிஸ் பரிசோதகர்களுக்கான ஆட்சேர்ப்பு செய்ததில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பொலிஸ் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு 2024 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
அந்த வர்த்தமானியின்படி, நடத்தப்பட்ட திறனாய்வுத் தேர்வுகளைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு நவம்பரில் தகுதியான 100 பேருக்கு நியமனங்கள் திட்டமிடப்பட்டன.
இருப்பினும், இந்த திட்டமிடப்பட்ட நியமனங்கள் குறித்த 100 பேருக்கும் வழங்கப்படவில்லை.
பதிலாக, அரசாங்கம் தப்போது வர்த்தமானியை மீண்டும் வெளியிட்டு புதிய ஆட்சேர்ப்புகளை வழங்கத் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலைமை சாத்தியமான ஊழலை சுட்டிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ள சாமர சம்பத் தசநாயக்க, காவல்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக, தாம் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளதாக கூறியுள்ளார்.