இலங்கை
மருதமுனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு – 93 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு!
மருதமுனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு – 93 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு!
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 93 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது பெரிய நீலாவணைக்கட்பட்ட மருதமுனை மற்றும் கடற்கரை வீதி போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இத் திடீர் சோதனையில் மோட்டார் சைக்கிள் ஆவணம், காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது,தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது,அதிவேகமாக செல்வது மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரினால் வழங்கப்பட்டன.