சினிமா
மாளவிகா மோகனனின் சொத்து மதிப்பால் ஷாக்கில் ரசிகர்கள்..! இத்தன கோடிக்கு அதிபதியா.?
மாளவிகா மோகனனின் சொத்து மதிப்பால் ஷாக்கில் ரசிகர்கள்..! இத்தன கோடிக்கு அதிபதியா.?
தமிழ், ஹிந்தி, கன்னடம் என மூன்று மொழிகளிலும் சாதித்துக் கொண்டிருக்கும் நடிகை மாளவிகா மோகனன், இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மாளவிகா, தற்போது முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக திகழ்கிறார்.இன்றைய தினம் சமூக வலைத்தளங்கள் முழுவதும் #HappyBirthdayMalavika என்கின்ற ஹாஷ்டாக் டிரெண்டாகி வருகின்ற நிலையில், அவரைப் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.மாளவிகா தற்போது அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கார்த்தி நடிக்கும் “சர்தார் 2” படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார். இதன் மூலம் ரசிகர்கள் மீண்டும் ஒரு முக்கியமான பாத்திரத்தில் அவரைக் காணவிருக்கின்றனர்.அத்தகைய நடிகை மாளவிகா தற்போது கொண்டிருக்கும் மொத்த சொத்து மதிப்பு கிட்டதட்ட 16 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.