இலங்கை

முதன் முறையாக வடமாகாண அணி கடினப்பந்து கிரிக்கட் தொடரில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்!

Published

on

முதன் முறையாக வடமாகாண அணி கடினப்பந்து கிரிக்கட் தொடரில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்!

49th Sports Festival கடினப்பந்து கிரிக்கட் தொடரின் 01-08-2025 அன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் தேசிய அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்யும் மாகாணமான மத்திய மாகாண அணியை வடமாகாண அணி வீரர்களின் திறமையான துடுப்பாட்டம், பந்து வீச்சு, துல்லியமான களத்தடுப்பு சிறந்த தலைமையின் வழிநடத்தல் காரணமாக இலகுவாக வென்று அரையிறுதிப் போட்டிக்கு தெரிவானது.

மேல்மாகாண அணியுடன் 02-08-2025 அன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் வடமாகாண அணியினர் தோல்வி அடைந்தார்கள். மேல்மாகாண அணியினை அதிர்ப்தியை ஏற்றப்படுத்தும் வகையில் இறுதிவரை பரபரப்பான போட்டியாக அமைந்தது ….

Advertisement

03-08-2025 அன்று மூன்றாவது அணியை தெரிவு செய்யும் போட்டியில் சப்ரகமுவ மாகாண அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வடமாகாண அணி வீரர்களின் துல்லியமான பந்து வீச்சு, நேர்த்தியான களத்தடுப்பு சிறந்த தலைமையின் வழிநடத்தல் காரணமாக வரலாற்றில் முதல் தடைவையாக வடமாகாண அணி மூன்றாம் இடத்தினை கைப்பற்றியது.

சீரற்ற கரடு முரடான மெட்ரின் மைதானத்தில் விளையாடி கிளிநொச்சி மாவட்ட வீரர்கள் 12 பேர் இவ்வணியில் அங்கம் வகித்தார்கள் அனைத்து போட்டிகளும் புல்வெளி (turf) மைதானத்தில் நடைபெற்றது.

இவ் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version