இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பைப் பறிப்பது ஆபத்து; கூறுகிறார் சமன் ரத்னபிரிய

Published

on

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பைப் பறிப்பது ஆபத்து; கூறுகிறார் சமன் ரத்னபிரிய

போரை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்த ராஜபக்ச மீது தமிழ் புலம்பெயரிகள் இன்னமும் வைராக்கியத்துடனேயே உள்ளனர். இதனால் அவரைப் பழிவாங்க முற்படக்கூடும். எனவே, அவர் உட்பட முன்னாள் ஜனாதிபதிகளுக்குப் பாதுகாப்பு அவசியம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதிப் பதவியை வகிப்பவர் துணிவுடன் முடிவுகளை எடுக்கவேண்டும். ஜனாதிபதியால் எடுக்கப்படும் முடிவு 90 வீதமானோருக்குச் சாதகமாக இருக்கலாம். 10 வீதமானோர் அதனை எதிர்க்கலாம். 10 சதவீதமானோர், ஜனாதிபதி ஓய்வுபெற்ற பின்னர் அவரை பழிவாங்க முற்படக்கூடும். அதனால் தான் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஓய்வின் பின்னரும் பாதுகாப்பு உள்ளிட்ட வரப்பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.

Advertisement

குறிப்பாக மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டுவந்த தலைவர். அவரைப் பழிவாங்கும் நோக்கில் சில தமிழ்ப் புலம்பெயரிகள் செயற்படலாம் – என்றார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version