பொழுதுபோக்கு

வரலாறு படத்தில் குட்டி அஜித்; அர்ஜுனுக்கு மகன் மாதிரி: இந்த சிறுவன் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

Published

on

வரலாறு படத்தில் குட்டி அஜித்; அர்ஜுனுக்கு மகன் மாதிரி: இந்த சிறுவன் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. சினிமா தோன்றிய காலத்தில் இருந்தே இவ்வித நடைமுறை இருக்கிறது. ஆனால் நடிக்கும் அனைத்து குழந்தை நடிகர்களுக்கும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருப்பதில்லை. அதே சமயம் ஒருசில குழந்தை நட்சத்திரங்கள், தங்கள் சிறப்பான நடிப்பின் மூலம் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடுவார்கள். அந்த வகையிலான ஒரு நடிகர் தான் சச்சின் லட்சுமண்.அஜித் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான படம் வரலாறு. காட்ஃபாதர் என்று முதலில் பெயர் வைக்கப்பட்ட இந்த படம், அதன்பிறகு வரலாறு என்று மாற்றப்பட்டது. அப்பா இரு மகன்கள் என 3 கேரக்டரில் அஜித் நடித்த இந்த படத்தில், கனிகா, அசின், சுஜாதா, ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி படத்தை தயாரித்தார்.அஜித் ரசிகர்கள் மட்டும் இல்லாமல், பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம், ஒரு பெண் போல் இருக்கும் நடன கலைஞரான அஜித்தை கனிகா அவமானப்படுத்திவிட, அவரை அஜித் கற்பழித்துவிடுவார். இதனால் அவருக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. இதில் ஒருகுழந்தையை அஜித் தூக்கி வந்துவிட, மற்றொரு குழந்தை கனிகாவுடன் வளரும். கனிகாவுடன் வளரும் குழந்தை அஜித், அம்மாவை பார்த்துக்கொள்வதுடன், அப்பாவை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்து சில செயல்களில் ஈடுபடுவார்.இந்த செயல்கள் காரணமாக அப்பா அஜித்துக்கு என்ன நடந்தது என்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தில் ஜீவா என்ற வில்லன் அஜித்தின் சிறுவயது கேரக்டரில் நடித்திருந்தவர் தான் சச்சின் லட்சுமண். கிரி படத்தில் தேவயானியின் மகனாக நடித்திருந்த இந்த சிறுவன் தற்போது வளர்ந்து பெரியவர் ஆகிவிட்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த ஒரு பேட்டியில் சுந்தர்.சி இயக்கிய கிரி படம் தான் எனது முதல் படம். தேவயானியின் மகன் கேரக்டரில் நடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.அதன்பிறகு திருப்பாச்சி படத்தில் விஜய் நண்பர் யுகேந்திரனின் மகன் கேரகடரில் நடித்திருப்பார். இவரை தான் பட்டாசு பாலு (பசுபதி) வாழை இலையில் கட்டி தூங்கி வருவார். அதேபோல் ஆனந்த தாண்டவம் படத்தில் தமன்னாவின் தம்பி, மற்றும் சத்யம் படத்தில் நயன்தாராவுடனும் நடித்திருப்பார். வரலாறு பட வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசியுள்ள சச்சின் அந்த படத்தின் ஆடிஷனில் ஒரு டைலாக் பேச சொல்லி என்னை கே.எஸ்.ரவிக்குமார் அங்கிள் தேர்வு செய்தார்.அந்த படத்தில் நான் செய்த ஒவ்வொரு மூவ்மெண்டும் அவர் சொல்லிக்கொடுத்தது தான். நான் எதுவும் செய்யவில்லை. அவர் சொன்னதை அப்படியே செய்தேன். அவ்வளவு தான். இப்போதும் அஜித் சார் ரசிகாகள் என்னை எங்கு பார்த்தாலும் போட்டோ வேண்டும் என்று எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் கொடுத்த ஆதரவு தான் நான் இவ்வளவு பிரபலமாக முக்கிய காரணம் என்று சச்சின் லட்சுமணன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version